எலுமிச்சை சாதம்

Copy Icon
Twitter Icon
எலுமிச்சை சாதம்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 10 Min

Total Time : 20 Min

Ingredients

Serves : 4
  • எலுமிச்சை பழம் - 1 (பெரியது)


  • வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்


  • காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)


  • கடலை பருப்பு - 1 தேக்கரண்டி


  • உளுந்து - 1 தேக்கரண்டி


  • வேர்க்கடலை - 1 தேக்கரண்டி


  • கடுகு- 1/4 தேக்கரண்டி


  • சீரகம் - 1 தேக்கரண்டி


  • பச்சை மிளகாய் - 3


  • இஞ்சி - 1 சிறு துண்டு (நறுக்கவும்)


  • கொத்தமல்லி - 1 சிறிது


  • மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி


  • பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி


  • உப்பு - 1 1/2 தேக்கரண்டி


  • கறிவேப்பிலை 1 கொத்து


  • எண்ணெய் - 2 தேக்கரண்டி தாளிக்க

Directions

  • முதலில் எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து வைக்கவும் பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயம், முந்திரி, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
  • அதில் எலுமிச்சை கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதி வந்ததும் அடுப்பின் தணலை குறைத்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • தட்டில் சாதத்தை பரத்தி உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.
  • நன்கு ஆறிய சாதத்தில் ஆறிய கலவையை சேர்த்து கலந்து விடவும். சுவையான எலுமிச்சை சாதம் தயார்
  • இந்த எலுமிச்சை கரைசலை தண்ணீர் படாமல் மூன்று வாரம் வரை குளிர் சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாம். மிதமான தீயில் செய்தால் தான் கருகாமல் வரும்.