கோபி 65

Copy Icon
Twitter Icon
கோபி 65

Description

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • கோபி : 250 கிராம் அரிசி மாவு. : 1/2 டேபிள்ஸ்பூன் மைதா மாவு. : 1/2 டேபிள்ஸ்பூன் கடலைமாவு. : 1/2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது. : 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள். : 2 டீஸ்பூன் கரம் மசாலா தூள். : 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு. : 2 டீஸ்பூன்

Directions

  • காளிபிளவரை சிறுசிறு சதுர துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தி ல்காளிஃபிளவர் தவிர அனைத்து ப்பொருட்களையும் கொட்டி தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • இந்த மசாலா கலவையில் காளிஃபிளவர் துண்டுகளை போட்டு மெதுவாக கலந்து குளிர் சாதன பெட்டியில் குறைந்தது ஒரு மணி நேரம் வைக்கவும்.
  • ப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து 1 மணிநேரம் வைக்கவும்
  • பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் காளிஃபிளவர் துண்டு களை போட்டு பொரித்து எடுக்கவும்.