மீன் குழம்பு / Fish curry

Copy Icon
Twitter Icon
மீன் குழம்பு / Fish curry

Fish curry

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 30 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 4
  • மீன் - 1/2 கிலோ


  • பெரிய வெங்காயம்-1


  • தக்காளி-2


  • புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு


  • பூண்டு பற்கள்-10


  • சின்ன வெங்காயம்-10


  • தேங்காய் துருவல்-1/2 கப்


  • சீரகம்-1 டீ ஸ்பூன்


  • கொத்தமல்லி விதைகள்-2 டேபிள் ஸ்பூன்


  • காய்ந்த மிளகாய் வற்றல் -7


  • மஞ்சள் தூள்-1/4 டீ ஸ்பூன்


  • பெருங்காயத்தூள்-1 சிட்டிகை


  • உப்பு- தேவையான அளவு - 1/2 டீ ஸ்பூன்


  • தேங்காய் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்


  • கடுகு-1/4 டீ ஸ்பூன்


  • வெந்தயம்-1/4 டீ ஸ்பூன்


  • கருலேப்பில்லை - 1 கொத்து

Directions

  • சின்ன வெங்காயம் மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
  • ஒரு வாணலியில் தனித்தனியாக சீரகம், கொத்தமல்லி விதைகள், காய்ந்த மிளகாய் வற்றலை நன்றாக வறுத்து எடுத்து, சிறிது நேரம் குளிர வைக்கவும்.
  • பின்பு குளிர்ந்த பின், மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடித்து கொள்ளவும்.
  • மீனை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் புளி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கடுகு, வெந்தயம் பொடித்து கருலேப்பில்லை சேர்க்கவும்.
  • பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின்பு பொடித்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள்,பெருங் காயத்தூள், உப்பு சேர்த்து கிளறி, புளி கரைசலை வடிகட்டி சேர்க்கவும்.
  • ஒரு கொதி வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது, சிறிது தண்ணீர் சேர்த்து லேசாக கொதிக்க விடவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்க்கவும்.
  • பின்பு மீன் துண்டுகளை சேர்த்து கடாயை மூடி வைத்து மிதமான சூட்டில் வேக விடவும்.
  • ஒரு பத்து நிமிடத்திற்கு பிறகு மீன் வெந்துள்ளதா என சரி பார்க்கவும்.
  • மீன் வேகும் வரை மிதமான சூட்டில் குழம்பை கொதிக்க விட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • மீன் குழம்பு தயார்.