முருங்கை இலை சூப் / Drumstick leaves soup

Copy Icon
Twitter Icon
முருங்கை இலை சூப் / Drumstick leaves soup

Description

Drumstick leaves soup 

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 3
 • முருங்கை இலை- 1 கப்


 • தண்ணீர்-2 கப்


 • இஞ்சி துருவியது- 1 டீ ஸ்பூன்


 • பூண்டு விழுது- - 1 டீ ஸ்பூன்


 • சிறிய வெங்காயம்-10- பொடியாக நறுக்கி கொள்ளவும்


 • தக்காளி-1 - பொடியாக நறுக்கி கொள்ளவும்


 • சீரகம்-1/2 டீ ஸ்பூன்


 • மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்


 • பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை


 • மிளகு தூள்-1/2 டீ ஸ்பூன்


 • நல்லெண்ணெய்- 2 டீஸ்பூன்


 • உப்பு-தேவையான அளவு-1/4 டீ ஸ்பூன்

Directions

 • முருங்கை இலை களை நன்றாக கழுவி எடுக்கவும்
 • ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சீரகம் பொடித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, துருவிய இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
 • தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், பெருங் காயத்தூள் சேர்க்கவும்
 • பின்பு முருங்கை இலைகளை சேர்த்து கிளறி உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்த்து கிளறி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
 • விசில் அடங்கியதும் சூடான முருங்கை இலை சூப்பை பரிமாறலாம்