தேங்காய் மட்டன் கிரேவி

Copy Icon
Twitter Icon
தேங்காய் மட்டன் கிரேவி

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 30 Min

Total Time : 40 Min

Ingredients

Serves : 4
 • மட்டன் 1 /2கிலோ


 • வெங்காயம் 4


 • பட்டை 1


 • ஏலக்காய் 3


 • கிராம்பு 4


 • இஞ்சி பூண்டு விழுது 4 டேபிள் ஸ்பூன்


 • தேங்காய் 1 /2 மூடி


 • சீரகம்-1 டேபிள்ஸ்பூன்


 • மிளகு 1 டேபிள் ஸ்பூன்


 • கசகசா 1 டேபிள் ஸ்பூன்


 • காய்ந்த மிளகாய் 4


 • உருளைக்கிழங்கு 4


 • என்னை 100 மில்லி

Directions

 • குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் கரித்துண்டுகள் இஞ்சி பூண்டு விழுது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்
 • சீரகம் மிளகு காய்ந்த மிளகாய் கசகசா இவற்றை ஒரு கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
 • மிக்ஸியில் தேங்காய் துருவல் வறுத்த சீரகம் மிளகு கசகசா காய்ந்த மிளகாய் வற்றல் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்
 • கறி நன்கு வெந்தவுடன் அதில் உருளைக்கிழங்கை சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் கடைசியாக அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
 • சுவையான தேங்காய் கலந்த மட்டன் கிரேவி தயாரிக்க நெய் சாதம் சப்பாத்தி தோசை புரோட்டா ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்