எள்ளு பொடி

Copy Icon
Twitter Icon
எள்ளு பொடி

Description

Black sesame seeds podi

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 5
 • கறுப்பு எள்ளு - 100 கிராம்


 • காய்ந்த மிளகாய் வற்றல்-10


 • உளுந்தம் பருப்பு-50 கிராம்


 • கருலேப்பில்லை- 1 கைப்பிடி


 • எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்


 • பூண்டுபற்கள் - 15


 • புளி -1 சிறிய எலுமிச்சை அளவு


 • பெருங்காயத்தூள்- 1/8 டீ ஸ்பூன்


 • உப்பு- தேவையான அளவு- 1 டீ ஸ்பூன்

Directions

 • வாணலி சூடான பின் எள்ளு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வறுக்கவும். சிறிது நேரத்தில் எள்ளு பொடிக்க தொடங்கும். அந்த பததிற்கு வரும் போது எள்ளை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி குளிர வைக்கவும்.
 • அதே வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் வற்றல், கருலேப்பில்லை சேர்த்து நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.
 • வறுத்த பொருட்கள்  நன்கு குளிர்ந்த பின் ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து பூண்டு பற்கள், பெருங் காயத்தூள், புளி மற்றும் உப்புடன் சேர்த்து நன்கு இட்லி பொடி பததிற்கு அரைக்கவும்
 • எள்ளு பொடியை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு நன்கு மூடி வைக்கவும்.
 • காலை சிற்றுண்டி வகைகளுடன் பரிமாறலாம்