கத்திரிக்காய் ரசம்

Copy Icon
Twitter Icon
கத்திரிக்காய் ரசம்

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
 • கத்திரிக்காய் - 1/2 kg


 • வெங்காயம் - 50 gram


 • தக்காளி - 50 gram


 • கரைத்த புளி 1 glass


 • பச்சமிளகாய் - 1 no


 • மிளகாய் தூள் 1/2 tspn


 • தனியா தூள் - 1 tspn


 • மஞ்சள் தூள் - 1/2 tspn


 • உப்பு - 1 1/2 tspn


 • தாளிக்க - எண்ணை - 2 tspn


 • சிவப்பு மிளகாய் (காஞ்ச மிளகாய்) - 3 nos


 • கடுகு - 1tspn


 • கருவேப்பிலை - 1 few


 • பூண்டு - 3 pod ( crushed)


 • கோதுமை மாவு - 1 tbspn

Directions

 • வெங்காயம் தக்காளியை அரைக்கவும், கத்திரிக்காயை நீளவாக்கில் அரியவும்.
 • ஒரு வாயகன்ற சட்டியில் கத்திரிக்காய், அரைத்த வெங்காயம் மற்றும் தக்காளி , பச்சமிளகாய், உப்பு, மிளகாய் தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.
 • புளியை கரைத்து சேர்த்து கொதிக்கவிடவும். கத்திரிக்காய் வெந்து புளி மசாலா வாசனை அடங்கியதும் கோதுமைமாவை அரை கப் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்
 • தனியாக தாளிப்பு சட்டியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்.
 • இதற்கு தொட்டு கொள்ள ஏதாவது பொரியல் (அ) கறி வடை, போன்றவை நன்றாக இருக்கும். ரசத்துக்கு பதில் இப்படி கத்திரிக்காய் ரசம் வைத்து சாப்பிடலாம், இதே போல் முருங்கக்காய், வெண்டைக்காயிலும் செய்யலாம்.
 • இஸ்லாமிய இல்லங்களில் செய்யும் பாரம்பரிய ரசம். இதே போல் முருங்கக்காய், வெண்டைக்காயிலும் செய்யலாம்.