Close Button

அடை மாவு போண்டா

அடை மாவு போண்டா

Cooking Time

Preparation Time : 10

Cook Time : 10

Total Time : 20

Ingredients

Serves 3

  • அடைமாவு1 கப் அடை மாவு செய்வதற்கு புழுங்கலரிசி ஒரு கப் பச்சரிசி அரை கப் உளுத்தம்பருப்பு கால் கப் கடலைப்பருப்பு கால் கப் துவரம்பருப்பு கால் கப் காய்ந்த மிளகாய் 6 பூண்டு 10 பல் சோம்பு அரை டீஸ்பூன்

  • வெங்காயம்-3

  • பச்சை மிளகாய் 2

  • கருவேப்பிலை 1 பின்ச்

  • எண்ணெய் 50 மில்லி

Directions

  • 01

    அடை மாவு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசி பருப்பு வகைகளை தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும் கடைசியாக மாவு அரைக்கும்போது அதனுடன் காய்ந்த மிளகாய் பூண்டு சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அரைத்த மாவை எட்டு மணி நேரம் புளிக்க விடவும்

  • 02

    வெங்காயம் பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  • 03

    இப்பொழுது அடை மாவு போண்டா செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் மாவு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எண்ணெயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

Review

0

Please Login to comment

Link copied