Close Button

கடலைப் பருப்பு மசால் வடை

கடலைப் பருப்பு மசால் வடை

Cooking Time

Preparation Time : 60

Cook Time : 10

Total Time : 70

Ingredients

Serves 4

  • கடலைப்ருப்பு 1 கப்

  • வெங்காயம்-3

  • பூண்டு 10 பல்

  • பச்சை மிளகாய் 1

  • சோம்பு 2 ஸ்பூன்

  • கோஸ் துருவியது 1 கப்

  • உப்பு 1 ஸ்பூன்

  • மல்லி இலை 1 கப்

  • எண்ணெய் 1/4 லிட்டர்

Directions

  • 01

    கடலைப்பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  • 02

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  • 03

    மிக்ஸியில் கடலை பருப்பு பச்சை மிளகாய் பூண்டு வெங்காயம் சோம்பு உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  • 04

    அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் கோஸ் துருவல் கொத்தமல்லி இலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்

  • 05

    பிசைந்த மாவை சிறிய வடைகளாக தட்டி கொள்ளவும்

  • 06

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வடைகளை இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

  • 07

    சுவையான கடலை பருப்பு மசால் வடை தயார்

Review

0

Please Login to comment

#Tags

Link copied