கொத்து சப்பாத்தி

Copy Icon
Twitter Icon
கொத்து சப்பாத்தி

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 10 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • கோதுமை மாவு 2 கப்


  • உப்பு-1 ஸ்பூன்


  • தண்ணீர் 1 கப்


  • வெங்காயம் 4


  • தக்காளி 1


  • குடை மிளகாய் 2


  • இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்


  • மிளகாய்த்தூள் 1ஸ்பூன்


  • கரம்மசாலா 1/2 டீஸ்பூன்


  • சோயா சாஸ் 1 டீஸ்பூன்


  • டொமேட்டோ சாஸ் 1 டீஸ்பூன்


  • எண்ணெய் 100 மில்லி

Directions

  • பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  • குடைமிளகாய் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  • சப்பாத்தி மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் தேய்த்து தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்
  • சப்பாத்திகளும் சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் குடமிளகாய் தக்காளி இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  • பிறகு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் சேர்த்து கிளறவும்
  • கடைசியாக வெட்டி வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு சுருள கிளறவும்
  • ஈஸியான சுவையான கொத்து சப்பாத்தி தயார்