மாசி கருவாடு தொக்கு

Copy Icon
Twitter Icon
மாசி கருவாடு தொக்கு

Dry fish thokku 

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 20 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 4
  • மாசி கருவாடு - பொடித்தது- 3 டேபிள் ஸ்பூன்


  • துருவிய தேங்காய்-2  டேபிள் ஸ்பூன்


  • பெரிய வெங்காயம்-1 -பொடியாக நறுக்கிக் கொள்ளவும்


  • தக்காளி-1 -பொடியாக நறுக்கிக் கொள்ளவும்


  • கருலேப்பில்லை- சிறிதளவு- 1 டேபிள் ஸ்பூன்


  • கரம் மசாலா தூள்- 1 சிட்டிகை


  • பெருங் காயத்தூள்- 1 சிட்டிகை


  • உப்பு- தேவையான அளவு -1/4 டீ ஸ்பூன்


  • மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்


  • மிளகாய் தூள்- 1/4 டீ ஸ்பூன்


  • நல்லெண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்


  • கடுகு- 1/4 டீ ஸ்பூன்

Directions

  • பொடித்த மாசி கருவாடு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸி ஜாரில் ஒரு சில விநாடிகள் நன்கு பொடித்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, கருலேப்பில்லை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் உப்பு, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங் காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
  • இதனுடன் நன்கு பொடித்த மாசி கருவாடு மற்றும் தேங்காய் கலவையை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • நன்கு சுருள வதக்கிய பின் சாம்பார் சாதத்துடன் பரிமாறலாம்.