இலை மீன் குழம்பு

Copy Icon
Twitter Icon
இலை மீன் குழம்பு

Description

Cooking Time

Preparation Time :2 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 2 Hr 30 Min

Ingredients

Serves : 3
 • வாழை இலை 1


 • பாசிப்பருப்பு 100கி


 • தட்டை பயிறு 100 கி


 • மிளகாய் தூள் 1½ ஸ்பூன்


 • சின்ன வெங்காயம் 50 கி


 • தக்காளி 1


 • புளி கரைசல் 1 கப்


 • பூண்டு 7 பல்


 • கருவேப்பிலை 1 கொத்து


 • நல்லெண்ணெய் 3 ஸ்பூண்


 • கடுகு 1/4 ஸ்பூன்


 • வெந்தயம் 1 ஸ்பூன்


 • காய்ந்த மிளகாய் 2

Directions

 • இருவகை பயிர்களையும் ஒன்றாக இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்
 • பின்னர் பருப்பு உடன் சோம்பு , வரமிளகாய் ,உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
 • அரைத்த பருப்பை வாழை இலையில் வைத்து நன்கு சுருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்
 • வேந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.
 • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , வெந்தயம் சேர்த்து நன்கு பொரித்து
 • பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு , கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
 • மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
 • தக்காளி சேர்த்து வதக்கவும்
 • புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
 • இடையில். உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு
 • பின்னர் வேகவைத்த பருப்பு சேர்த்து நன்கு இரண்டு கொதி விடவும்
 • இப்போது மீனின் சுவையில் இலை சைவ மீன்குழம்பு தயார்
 • இதன் சுவை அசைவ மீனை போலவே இருக்கும்