முருங்கை கீரை வடை

Copy Icon
Twitter Icon
முருங்கை கீரை வடை

Description

Drumstick leaves vadai

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 5
 • முருங்கை இலை - 1 கப்


 • கடலைப்பருப்பு - 1/2 கப்  - 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்


 • பெருஞ்சீரகம் - 1/2 தே. கரண்டி


 • கருவேப்பில்லை - 1/4 கப்


 • வெங்காயம் - 1 - நன்றாக நறுக்கி கொள்ளவும்


 • கொத்தமல்லி இலை - சிறிதளவு -1 டேபிள் ஸ்பூன்


 • பச்சை மிளகாய் - 1 - நன்றாக நறுக்கி கொள்ளவும்


 • உப்பு - தேவைக்கு - 1/2 டீ ஸ்பூன்


 • மஞ்சள் தூள் - 1/4 தே. கரண்டி


 • கரம் மசாலா - 1/4 தே. கரண்டி


 • பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை


 • மிளகாய் தூள் - 1/4 தே. கரண்டி


 • இஞ்சி பூண்டு விழுது - 1 தே. கரண்டி


 • அரிசி மாவு - 1 மே. கரண்டி


 • எண்ணெய் - பொறிப்பதற்கு - 1/2 லிட்டர்

Directions

 • ஊற வைத்த கடலைப் பருப்பை மிக்ஸியில், பெருஞ்சீரகத்துடன் சேர்த்து கர மொரவென அரைக்கவும்.
 • பின்பு அரைத்த விழுதுடன், அனைத்துப் பொருட்களையும்(எண்ணெயைத் தவிர ) ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும்.
 • கிளறிய கலவையை சிறு சிறு உருண்டைகள் ஆக்கவேண்டும்.
 • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கவும்.
 • எண்ணெய் சூடான பின்பு, உருண்டைகளை வடை போல் தட்டி எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
 • சுவையான முருங்கை கீரை வடை தயார்.
 • தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்
 •  முருங்கை இலையை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டு தண்ணீரில் இல்லாமல் பருப்புடன் சேர்க்கவும்.