வெங்காய ரொட்டி

Copy Icon
Twitter Icon
வெங்காய ரொட்டி

Description

Onion Roti

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 4
 • கோதுமை மாவு-2 1/2 கப்


 • வெங்காயம்-2


 • பச்சை மிளகாய்-1


 • இஞ்சி-1/2 விரல் அளவு


 • கருலேப்பில்லை- சிறிதளவு -1 டேபிள் ஸ்பூன்


 • கொத்தமல்லி இலை-சிறிதளவு -1 டேபிள் ஸ்பூன்


 • கரம் மசாலா தூள்-1 சிட்டிகை


 • பெருங் காயத்தூள்-1 சிட்டிகை


 • மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்


 • உப்பு-தேவையான அளவு -3/4 டீ ஸ்பூன்


 • நெய்- 1 டேபிள் ஸ்பூன்


 • மிளகு சீரகத் தூள்- 1/4 டீ ஸ்பூன்


 • ஓமம் விதைகள்- 1/4 டீ ஸ்பூன்


 • சீரகம் - 1/4 டீ ஸ்பூன்


 • கோதுமை மாவு- ரொட்டி மேல் தூவி தேய்ப்பதற்கு -3 டேபிள் ஸ்பூன்


 • எண்ணெய்-தேவையான அளவு -3 டேபிள் ஸ்பூன்

Directions

 • 1/2 வெங்காயம், கருலேப்பில்லை, கொத்தமல்லி இலை களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
 • 1 1/2 வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை மிக்ஸியில் ஒரு சில நொடிகள் அரைத்து எடுக்கவும்
 • அரைத்த விழுது டன் நறுக்கிய வெங்காயம், கருலேப்பில்லை, கொத்தமல்லி இலை, கரம் மசாலா தூள், உப்பு, பெருங் காயத்தூள், மஞ்சள் தூள், நெய், மிளகு சீரகத் தூள், ஓமம் விதைகள், சீரகம் மற்றும் கோதுமை மாவு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து ரொட்டி மாவு பததிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
 • ரொட்டி மாவை சிறு சிறு உருண்டை களாக ஆக்கவேண்டும்.
 • பின் சிறிது கோதுமை மாவை உருண்டை மேல் தூவி ரொட்டி  போல் தேய்த்து எடுக்கவும்.
 • பின்னர் தோசை கல்லில் எண்ணெய் தெளித்து தேய்த்த ரொட்டியை வைத்து வேக விடவும்.
 •  ரொட்டியின்   மேலும் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு இரு புறமும் வேக வைக்கவும்.
 • சூடாக ரொட்டிகளை தேங்காய் சட்னி அல்லது ஊறுகாய் உடன் பரிமாறலாம்.