வாழைப்பூ வடை /  Banana flower vadai

Copy Icon
Twitter Icon
வாழைப்பூ வடை /  Banana flower vadai

Description

Banana flower vadai 

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 25 Min

Total Time : 55 Min

Ingredients

Serves : 5
 • வாழைப்பூ  - 1 - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்


 • கடலைப்பருப்பு - 1/2 கப்  - 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்


 • துவரம் பருப்பு-1/4 கப் - 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்


 • பெருஞ்சீரகம் - 1/2  டீ ஸ்பூன்


 • கருவேப்பில்லை - 1/4 கப்


 • வெங்காயம் - 1 - நன்றாக நறுக்கி கொள்ளவும்


 • கொத்தமல்லி இலை - சிறிதளவு- 2 டேபிள் ஸ்பூன்


 • பச்சை மிளகாய் - 2 - நன்றாக நறுக்கி கொள்ளவும்


 • உப்பு - தேவைக்கு - 1/2 டீ ஸ்பூன்


 • மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்


 • கரம் மசாலா - 1/4 டீ ஸ்பூன்


 • பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை


 • இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்


 • எண்ணெய் - பொறிப்பதற்கு - 1

Directions

 • ஊற வைத்த கடலைப் பருப்பு, துவரம் பருப்பை மிக்ஸியில், பெருஞ்சீரகத்துடன் சேர்த்து கர மொரவென அரைக்கவும்.
 • நறுக்கிய வாழைப்பூ மற்றும் பச்சை மிளகாய்  சேர்த்து ஓரிரு நொடிகள் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்
 • பின்பு அரைத்த விழுதுடன், அனைத்துப் பொருட்களையும்(எண்ணெயைத் தவிர ) ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கிளறவும்.
 • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கவும்.
 • எண்ணெய் சூடான பின்பு,  வடை மாவை சிறிது எடுத்து வட்டமாக தட்டி எண்ணெயில் பொன்னிறம் ஆகும் வரை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்
 • சுவையான வாழைப்பூ வடை தயார்.
 • தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
 • குறிப்பு: வாழைப்பூவின் தோலை உரித்து சிறிய பூக்களை மட்டும் எடுத்து வைக்கவும். சிறிய பூக்களின் உட்புறம் உள்ள நரம்புகளை அகற்றி விடவும். பூக்கள் விரைவில் நிறம் மாறும். அதனால் நறுக்கிய வாழைப்பூக்களை நீர் மோரில் போட்டு வைக்கவும்.