வாழைப்பூ பொறியல்  / Vazhaipoo poriyal / Banana flower curry

Copy Icon
Twitter Icon
வாழைப்பூ பொறியல்  / Vazhaipoo poriyal / Banana flower curry

Banana flower curry 

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 25 Min

Total Time : 55 Min

Ingredients

Serves : 5
  • வாழைப்பூ-1 - பொடியாக நறுக்கிக் கொள்ளவும்


  • தேங்காய் துருவல்- 3 டேபிள் ஸ்பூன்


  • பச்சை மிளகாய்-2


  • சீரகம் 1/4 டீ ஸ்பூன்


  • மஞ்சள் தூள்-  1/4 டீ ஸ்பூன்


  • பெருங்காயத்தூள்-1 சிட்டிகை


  • உப்பு- தேவையான அளவு (1/4 tsp)


  • எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்


  • கடுகு  1/4 டீ ஸ்பூன்


  • கருலேப்பில்லை- 1 டேபிள் ஸ்பூன்


  • காய்ந்த மிளகாய் வற்றல்-2


  • சிறிய வெங்காயம்- 2 - நன்கு பொடித்து கொள்ளவும்

Directions

  • தேங்காய் துருவல், பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து மிக்ஸி ஜாரில் கர மொர என்று  அரைத்து எடுக்கவும்
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கடுகு பொடித்து கொள்ளவும்.
  • பின்பு காய்ந்த மிளகாய், வெங்காயம், கருலேப்பில்லை சேர்த்து வதக்கவும்.
  • நன்கு வதங்கியதும் வாழைப்பூ சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
  • பின்பு அரைத்த விழுது, உப்பு, பெருங் காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் வதக்கவும்.
  • வாழைப்பூ நன்கு  வதங்கும் வரை மிதமான சூட்டில்  வேக வைக்கவும் .
  • சூடான சாதத்துடன் பரிமாறலாம்.
  • குறிப்பு: வாழைப்பூவின் தோலை உரித்து சிறிய பூக்களை மட்டும் எடுத்து வைக்கவும். சிறிய பூக்களின் உட்புறம் உள்ள நரம்புகளை அகற்றி விடவும். பூக்கள் விரைவில் நிறம் மாறும். அதனால் நறுக்கிய வாழைப்பூக்களை நீர் மோரில் போட்டு வைக்கவும்.