முருங்கை இலை டம்ப்ளி- முருங்கை இலை தயிர் பச்சடி

Copy Icon
Twitter Icon
முருங்கை இலை டம்ப்ளி- முருங்கை இலை தயிர் பச்சடி

Drumstick leaves Tambli 

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 5
 • முருங்கை இலை - 1 கப்


 • பச்சை மிளகாய் -1


 • சீரகம் - 1/4 டீ ஸ்பூன்


 • தயிர் - 1 கப்


 • தண்ணீர் - 2 கப்


 • துருவிய தேங்காய் - 1/4 கப்


 • மஞ்சள் தூள்- 1/4 டீ ஸ்பூன்


 • பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை


 • உப்பு - தேவையான அளவு (1/4 டீ ஸ்பூன்)


 • எண்ணெய் - 1 தேக்கரண்டி


 • தாளிக்க தேவையான பொருட்கள்: நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள் ஸ்பூன்


 • கடுகு - 1/4 டீ ஸ்பூன்


 • சீரகம்-1/4 டீ ஸ்பூன்


 • காய்ந்த சிவப்பு மிளகாய் -2


 • எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

Directions

 • முருங்கை இலைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
 • கடாயில் எண்ணெய் சேர்த்து, சீரகம், முருங்கை இலை மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
 • மிதமான தீயில் 5 நிமிடம் வதக்கி மஞ்சள் தூள் மற்றும் பெருங் காயத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
 • அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்கவும்.
 • நன்கு குளிர்ந்தவுடன், துருவிய தேங்காய்  மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
 • ஒரு கிண்ணத்தில், தயிரை நன்கு கலக்கி பின்பு நீர், அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்கு கிளறவும்.
 • தாளிக்க பட்டியலிடப்பட்ட பொருட்களை கொண்டு தாளித்து பச்சடியுடன் சேர்த்து  நன்கு கலக்க வேண்டும்
 • சூடான சாதத்துடன் பரிமாறவும்.