குஜராத்தி தாகி காதி

Copy Icon
Twitter Icon
குஜராத்தி தாகி காதி

Gujarati dhahi kadhi 

Cooking Time

Preparation Time :15 Min

Cook Time : 15 Min

Total Time : 30 Min

Ingredients

Serves : 5
  • 1. தயிர்- 1 1/2 கப்


  • 2. கடலை மாவு- 2 டேபிள் ஸ்பூன்


  • 3. இஞ்சி- 1/2 டீ ஸ்பூன்- நன்றாக துருவியது


  • 4. வெள்ளைப் பூண்டு - 1/2 டீ ஸ்பூன்- நன்றாக துருவியது


  • 5. பச்சை மிளகாய்-1 - நன்றாக நறுக்கியது


  • 6. காய்ந்த மிளகாய் வற்றல்-2 - நன்றாக நறுக்கியது


  • 7. மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்


  • 8. மிளகாய் தூள் - 1/4 டீ ஸ்பூன்


  • 9. சீனி சர்க்கரை- 1 டீஸ்பூன்


  • 10. உப்பு- தேவையான அளவு (1/4 டீ ஸ்பூன்)


  • 11. தண்ணீர்- 2 1/2 கப்


  • 12. தாளிக்க தேவையான பொருட்கள்: நெய்- 2 டீஸ்பூன்


  • 13. கடுகு- 1/2 டீ ஸ்பூன்


  • 14. சீரகம்- 1/2 டீ ஸ்பூன்


  • 15. காய்ந்த மிளகாய் வற்றல்-2


  • 16. பட்டை 1 இன்ச்


  • 17. கிராம்பு-4


  • 18. பெருங் காயத்தூள்- 1 சிட்டிகை


  • 19. கருலேப்பில்லை- 1 டேபிள் ஸ்பூன்


  • 20. நறுக்கிய வெங்காயம்- 2 டீஸ்பூன்

Directions

  • 1. ஒரு பாத்திரத்தில் தயிர், கடலை மாவு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்
  • 2. தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
  • 3. நன்கு கலக்கிய பின் பாத்திரத்தை மிதமான சூட்டில் கொதி வரும் வரை நன்கு கிளறவும்.
  • 4. தாகி காதி சிறிது கெட்டியாக மாறும் வரை மிதமான சூட்டில் நன்கு கிளறவும்.
  • 5. ஒரு வாணலியில் நெய் ஊற்றி தாளிக்க பட்டியலிடப்பட்ட பொருட்களை கொண்டு தாளித்து தாகி காதி யுடன் சேர்க்கவும்.
  • 6. மேலும் 5 நிமிடத்திற்கு மிதமான தீயில் சூடாக்கவும்.
  • 7. சூடான சாதத்துடன் பரிமாறவும்.