பூங்கார் அரிசி புட்டு

Copy Icon
Twitter Icon
பூங்கார் அரிசி புட்டு

Description

பூங்கார் அரிசி பயன்படுத்தி செய்த புட்டு. 

Cooking Time

Preparation Time :3 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 3 Hr 30 Min

Ingredients

Serves : 3
 • பூங்கார் அரிசி - 1 கப்


 • வெல்லம் - 3/4 கப்


 • துருவிய தேங்காய் - 1/4 கப்


 • நெய் - 2 டேபிள் ஸ்பூன்


 • திராட்சை, முந்நிரி, ஏலக்காய் - தலா 4


 • உப்பு - 1 டீஸ்பூன்

Directions

 • அரிசியை வாணலியில் போட்டு 5 நிமிடம் வறுக்கவும் .
 • பிறகு அரிசி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊறவிடவும்.
 • அரிசியில் நீரை வடித்து மிக்சியில் அரைக்கவும். நீர் சேர்க தேவையில்லை.
 • அரைத்த அரிசி பொடியை ஆவியில் 20 நிமிடம் வேகவைக்கவும். பிறகு ஆரவைக்கவும். மாவு உதிரியாக இருக்க வேண்டும்.
 • ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். தேங்காய் துருவல் சேர்க்கவும்.
 • நெய்யில் முந்திரி திராட்சை வருத்து வெல்ல பாகில் சேர்க்கவும்.
 • ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
 • நன்றாக கலக்கவும். கம்பி பதம் வந்ததும் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
 • சிரிதளவு நெய் சேர்த்து இரக்கவும்.
Saranya R

Saranya R

Follow