சோயா சுக்கா

Copy Icon
Twitter Icon
சோயா சுக்கா

Description

தென் இந்திய முறைப்படி செய்த சோயா சுக்கா . 

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 30 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 3
  • சோயா 3/4கப்


  • தக்காளி 2


  • நல்லெண்ணெய் 3tbsp


  • முழு மிளகு 3/4tsp


  • மஞ்சள் 1/4tsp


  • லெமன் ஜூஸ் 1tsp


  • கருவேப்பிலை 15


  • வெங்காயம் 2


  • இஞ்சி பூண்டு விழுது 1tbsp


  • சீரகம் 1/2tsp + 1tsp


  • கறி மசாலா தூள் 1tsp


  • தேங்காய் பால் 2tbsp


  • கொத்தமல்லி 1tbsp


  • சமையல் எண்ணெய் 1/2tsp


  • உப்பு தேவையான அளவு (1/2 tsp)

Directions

  • கொதிக்கும் நீரில் எண்ணெய் உப்பு கலந்து சோயா வை அதில் கலக்கவும் . பின் அடுப்பை அணைக்கவும்.
  • சோயா வை 10நிமிடம் கழித்து குறைந்தது ஐந்து முறை தண்ணிரில் பிழிந்து அலசவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கொஞ்சம் சீரகம் கறவேப்பிலை இட்டு பொரிக்கவும்
  • வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் கூழ் போல் ஆகும் வரை
  • பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  • இன்னொரு வாணலியில் மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும். நன்கு வாசம் வந்த பிறகு மிக்ஸியில் அரைக்கவும்
  • மீண்டும் மசாலா வதக்கிய வாணலியில் மசாலா பவுடர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்
  • இப்பொழுது சோயா அதில் சேர்க்கவும்..நன்றாக அதில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்
  • தண்ணீர் வற்றிய பிறகு அதில் தேங்காய் பால் கலக்கவும் . பின் நன்றாக சுக்கா ஆகும் வரை வதக்கவும்
  • இப்பொழுது அதில் உப்பு மற்றும் பிற சுவைகளை செக் செய்து கொள்ளவும்
  • கடைசியாக வறுத்த சீரகம் மிளகு தூள் சேர்த்து நன்கு கிளறி எலுமிச்சை தனியா கலந்து சூடாக பரிமாறவும்