உலர்பழ வாழை தோசை

Copy Icon
Twitter Icon
உலர்பழ வாழை தோசை

Description

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 2
  • 1 கப் கோதுமை மாவு


  • 1/2 கப் வெல்லம்


  • 1 டீஸ்பூன் ஏலக்காய்தூள்


  • 2 வாழை பழம்


  • 3 பாதாம்


  • 3 முந்திரி


  • 3 பிஸ்தா


  • 1/2 டீஸ்பூன் உப்பு


  • 2 கப் தண்ணீர்


  • 4 ஸ்பூன் எண்ணெய்

Directions

  • முதலில் கடாயில் பாதாம், முந்திரி மற்றும் பிஸ்தா சேர்த்து நன்றாக வறுத்து கொள்ளவும்
  • பின்னர் அதனை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு,நசுக்கிய வாழை பழம், அரைத்த உலர் பழ பொடி, ஏலக்காய் தூள்,வெல்லம், பின்ச் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • பின்னர் தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்
  • பின்னர் அடுப்பில் தோசை போல ஊற்றி நெய் அல்லது எண்ணெய் ஓரங்களில் ஊற்றி இரு புறமும் சமைக்கவும்
  • சுவையான உலர்பழ வாழை தோசை தயார்