பீட்ரூட் ரவை பணியாரம்

Copy Icon
Twitter Icon
பீட்ரூட் ரவை பணியாரம்

Description

Cooking Time

Preparation Time :1 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 1 Hr 30 Min

Ingredients

Serves : 3
  • ரவை 100 கிராம்


  • மைதா 100 கிராம்


  • சர்க்கரை 100கிராம்


  • பீட்ரூட் 1


  • நறுக்கிய முந்திரி 8


  • உலர்ந்த திராட்சை 15


  • ஏலக்காய் தூள் 1 /2 ஸ்பூன்


  • எண்ணெய் 250 மிலி

Directions

  • பீட்ரூட்டை தோல் சீவி நன்றாக கழுவிக் கொள்ளவும்.
  • அதை பொடியாக துருவி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  • அரைத்த பீட்ரூட்டை வடிகட்டி கொள்ளவும்.
  • ஒரு கிண்ணத்தில் ரவை, மைதா, சர்க்கரை மூன்றும் எடுத்து கொள்ளவும்.
  • அதனுடன் நறுக்கிய முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளவும்.
  • பீட்ரூட் சாறை சேர்த்து கொள்ளவும்.
  • தேவையான தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
  • 1 மணி நேரம் ஊற விடவும்.
  • 1 மணி நேரம் கழித்து அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஸ்பூனால் எடுத்து ஊற்றி ஒன்றிரண்டாக பொரித்து எடுக்கவும்.
  • திருப்பி போட்டு மறு புறமும் சிவக்க விடவும்.
  • இந்த இனிப்பு எண்ணெய் அதிகமாக இழுக்காது.
  • பீட்ரூட் சேர்த்து செய்து கொடுப்பதால் குழந்தைகளுக்கு சத்தான தின்பண்டம் ஆகும்.