உடனடி அடை

Copy Icon
Twitter Icon
உடனடி அடை

Description

Cooking Time

Preparation Time :30 Min

Cook Time : 20 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 3
  • கடலை மாவு 1 கப்


  • கோதுமை மாவு 1 கப்


  • அரிசி மாவு 1 கப்


  • ரவை 1/2 கப்


  • தயிர் 1/2 கப்


  • மிளகாய் தூள் 1 ஸ்பூன்


  • சோம்பு தூள் 1/2 ஸ்பூன்


  • இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்


  • உப்பு 1 1/2 ஸ்பூன்


  • எண்ணெய் 100 மிலி


  • பொடியாக நறுக்கிய வெங்காயம் 1


  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை 1 கைப்பிடி

Directions

  • ஒரு கிண்ணத்தில் எல்லா மாவையும் எடுத்து கொள்ளவும்.
  • அதில் தேவையான உப்பு, தயிர், மிளகாய் தூள், சோம்பு தூள், இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி தழை சேர்த்து கொள்ளவும்.
  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கையால் நன்றாக கலந்து கொள்ளவும்.
  • அரை மணி நேரம் புளிக்க விடவும்.
  • அரை மணி நேரத்திற்கு பிறகு ஊத்தப்ப தவாவை அடுப்பில் வைத்து எல்லா குழிகளிலும் அரை ஸ்பூன் எண்ணெய் விடவும்.
  • மாவை கரண்டியால் எடுத்து எல்லா குழிகளிலும் விட்டு சிவக்க விடவும்.
  • மறு பக்கம் திருப்பி போடவும்.
  • சிவந்தவுடன் தட்டில் எடுத்து வைக்கவும்.
  • சூடாக சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.