காடை மசாலா

Copy Icon
Twitter Icon
காடை மசாலா

Description

காடை மசாலா செய்து ருசியுங்கள்.

Cooking Time

Preparation Time :25 Min

Cook Time : 45 Min

Total Time : 1 Hr 10 Min

Ingredients

Serves : 3
  • காடை - 4


  • வெங்காயம் - 1 (பெரியது)


  • இஞ்சி பூண்டு விழுது - 2 teaspoon


  • தக்காளி - 2


  • பச்சை மிளகாய் - 3


  • தேங்காய் - 3 tablespoon


  • சோம்பு - 1 tablespoon


  • மஞ்சல் தூள் - 1/2 teaspoon


  • மிளகாய் தூள் - 1/2 teaspoon


  • மல்லி தூள் - 1 teaspoon


  • சீரக தூள் - 1/2 teaspoon


  • கருவேப்பிலை 1 string


  • கரம் மசாலா தூள் - 1/2 teaspoon


  • கொத்தமல்லி இலை 2 string


  • எண்ணை 3 tablespoon

Directions

  • ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி காய்ந்தவுடன் சிறியதாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பொன்னிறமானவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி தக்காளியை சேர்க்க வேண்டும்.
  • பின்பு மஞ்சள், மிளகாய், மல்லி,சீரகம் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து கலக்கவும்.
  • இத்துடன் சிறிய துண்டுகளாக நறுக்கிய காடையை சேர்த்து நன்கு மசாலாவுடன் சேர்க்கவும்.
  • ஒரு டம்பிளர் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  • காடை வேகும் நேரத்தில் தேங்காய், சோம்பு மற்றும் பச்சை மிளகாயை நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • காடை வெந்தவுடன் அரைத்து வைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
  • இத்துடன் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி வைக்கவும்.
  • ருசியான காடை மசாலா தயார்.