பழம் பீட்சா

Copy Icon
Twitter Icon
பழம் பீட்சா

Description

ஈச்ட சேர்க்காமல் பழங்கள் பயன்படுத்தி செய்த பீட்சா.

Cooking Time

Preparation Time :10 Min

Cook Time : 15 Min

Total Time : 25 Min

Ingredients

Serves : 3
  • 1/2 cups மைதா மாவு


  • 1/4 cups தயிர்


  • 1 tbsp எண்ணெய்


  • 1/2 tbsp பேக்கிங் பவுடர்


  • 1/4 tsp பேக்கிங் சோடா


  • 1/4 tsp உப்பு


  • 1/4 cups ஆப்பிள், கிவி - தோல் சீவி கட் செய்யவும்


  • 1/4 cups விப்பிங் கிரீம்


  • 1 tbsp ஜாம்


  • 1/4 cups முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, ஸ்ட்ராபெரி -நருக்கி கொள்ளவும்


  • 1 tbsp சாக்கோ சிப்


  • 6 nos குங்குமப்பூ

Directions

  • ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், தயிர் தேவையான அளவு சேர்த்து சாப்டான சப்பாத்தி மாவு பதத்திற்கு பினைந்து கொள்ளவும்.
  • பின் எண்ணெய் சேர்த்து பினைந்து 30 நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்கவும்.
  • ஓவனை 10 நிமிடம் சூடு செய்யவும்.
  • பின்னர் மாவை இரண்டு உருண்டையாக பிரித்து மாவு தொட்டு சப்பாத்தியாக தேய்த்து கொள்ளவும்.
  • பின்னர் ஓவனில் 150° இல் 15 நிமிடம் பேக் செய்யவும்.
  • பின் நன்றாக ஆரவைக்கவும்.
  • விப்பிங் கிரீமை பீட் செய்து கொள்ளவும்.
  • பின்னர் பீட்சா பேஸ் முழுவதும் ஜாம் தடவி கொள்ளவும். பின் அதன் மேல் பீட் செய்து வைத்த கிரீமை தடவவும்.
  • பின் நருக்கி வைத்த பழங்கள், முந்திரி,பாதாம், ஸ்ட்ராபெரி, உலர்ந்த திராட்சையை சேர்க்கவும்.
  • பின் அதன் மேல் சிறிது சாக்கோ சிப், குங்குமப்பூ தூவி பரிமாறவும்.