ஆப்ரிகாட் பால் ரவா கேசரி

ஆப்ரிகாட் பால் ரவா கேசரி

Cooking Time

Preparation Time : 15

Cook Time : 30

Total Time : 45

Ingredients

Serves 5

  • ஆப்ரிகாட் - 10 பழம் / உலர் பழம்

  • நெய் - 3/4 கப்

  • ரவை - 1 கப்

  • கேசரி பவுடர் - 1/2 டீஸ்பூன் /

  • சர்க்கரை - 2 கப்

  • பால் - 2 கப்

  • குங்கும பூ - 1 சிட்டிகை

Directions

  • 01

    முதலில் மிக்சியில் ஆப்ரிக்காட்டை கொஞ்சமாக பால் 3டித்து அதனுடன் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும்

  • 02

    பின் ஒரு வாணலியில் ரவையை சேர்த்து குறைவான தீயில் பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • 03

    பின்பு 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூவை சேர்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

  • 04

    பிறகு ஒரு வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ரவையை மெதுவாக சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். பின் அதில் குங்குமப்பூ பாலை சேர்த்து மிதமான தீயில், தொடர்ந்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.

  • 05

    ரவை வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் ஆப்ரிகாட் பேஸ்ட் சேர்த்து கிளறவும்

  • 06

    ரவையானது நன்கு வெந்து, ஆப்ரிகாட் உடன் சேர்ந்து வரும்பொழுது, அதில் சர்க்கரையை சேர்த்து தொடர்ந்து கிளறி, சற்று கெட்டியாகும் போது, அதில் நெய் சேர்த்து கிளறி விட வேண்டும்.

  • 07

    சுவையான ஆப்ரிகாட் பால் ரவா கேசரி தயார், உங்களுக்கு முந்திரி திராட்சை பிடித்தால் பொன்னிறமாக பொரித்து வைத்து கடைசியாக சேர்க்கலாம்

Review

0

Please Login to comment

Link copied