சைவ கோழி பட்டாணி செமி க்ரேவி

சைவ கோழி பட்டாணி செமி க்ரேவி

Cooking Time

Preparation Time : 20

Cook Time : 20

Total Time : 40

Ingredients

Serves 3

  • சைவ கோழி பாக்கெட் 1/2 nos

  • பாட்டணி 1 cups

  • வெங்காயம் 2 nos

  • தக்காளி 1 nos

  • அரைத்து எடுக்க வேண்டிய பொருட்கள்; தக்காளி 1 nos

  • சோம்பு 1 tsp

  • தேங்காய் 1/2 cups

  • வரமிளகாய் 6 nos

  • தேங்காய் பால் - அரைத்து கெட்டியாக எடுக்கவும் 1 cups

  • தாளிக்க வேண்டிய பொருட்கள்; சோம்பு 1 tsp

  • பட்டை 1 nos

  • இலை 1 nos

Directions

  • 01

    முதலில் , தக்காளி, சோம்பு, வரமிளகாய், தேங்காய் இதை எண்ணெயில்லாமல் வறுத்து தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுக்கவும்

  • 02

    பின் தேங்காய் அரைத்து கெட்டியாக பால் எடுத்து கொள்ளவும்

  • 03

    சைவ கோழியை சூடு தண்ணீரில் கழுவி எடுத்து கொள்ளவும்,, பட்டணியை குக்கரில் 2 சவுண்ட் வேக வைத்து எடுத்து தண்ணியை வடிகட்டி பட்டாணியை மட்டும் எடுத்து கொள்ளவும்

  • 04

    பிறகு பேனில் எண்ணெய் விட்டு சோம்பு, பட்டை, இலை, போட்டு தாளிக்கவும்

  • 05

    வெங்காயம்,, தக்காளி,, போட்டு வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கவும்

  • 06

    இன்னொரு பக்கத்தில் சைவ கோழியை எண்ணெயில் தீப் ஃப்ரையாக பொரித்து எடுத்து கொள்ளவும்

  • 07

    பொறித்து எடுத்த சிவா கோழியை மசாலா விழுது வதங்கியவுடன் சேர்த்து, வேகா வைத்த பட்டாணியையும் சேர்த்து நன்றாக கிளறவும்,

  • 08

    கிளறிய பின் கெட்டியாக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்

  • 09

    கெட்டியாக கொதித்து கிரேவியை பிரட்டி அல்லவும்,, சுவையான சைவ கோழி செமி கிரேவி தயார்

Review

0

Please Login to comment

Link copied