செட்டிநாடு சிக்கன் பிரியாணி

 செட்டிநாடு சிக்கன் பிரியாணி

Cooking Time

Preparation Time : 25

Cook Time : 45

Total Time : 70

Ingredients

Serves 5

  • பாஸ்மதி அரிசி 1 cups

  • தேங்காய் பால் கெட்டியாக 1 cups

  • .நீளமாக நறுக்கிய வெங்காயம் 2 nos

  • தக்காளி 2 nos

  • கருவேப்பில்லை நன்கு காய வைத்து பொறுபொறுப்பாக வந்த பின் பொடியாக்கி வைத்து கொள்ளலாம். இல்லையென்றால் அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் ஆக அரைத்து எடுத்து கொள்ளலாம் .... 2 tbsp

  • எண்ணெய் 5 tbsp

  • பட்டை 1 nos

  • இலவங்கம் 2 nos

  • கிராம்பு 2 nos

  • ஏலக்காய் 2 nos

  • தண்ணீர் - தேவையான அளவு 2 cups

  • உப்பு- சிறிது 1 tsp

  • அரைத்து_எடுக்க_வேண்டிய_பொருட்கள்: சோம்பு 1 tbsp

  • முந்திரி 3 nos

  • பச்சை மிளகாய்(காரத்திற்கு ஏற்றார் போல்) 5 nos

  • இஞ்சி 1 tsp

  • சிறுதுண்டு வெங்காயம் 1-2 nos

  • சிறிதளவு தக்காளி-சிறிதளவு இவை அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். 1 nos

Directions

  • 01

    முதலில் தேங்காய் பால் கெட்டியாக எடுத்து கொள்ளவும்.

  • 02

    பின் அரைத்து எடுக்கவேண்டிய அனைத்தையும் அரைத்து எடுத்துகொள்ள வேண்டும்.

  • 03

    அதன் பிறகு கோழியை நன்றாக எலுமிச்சை..,மஞ்சத்தூள்... தயிர் போட்டு நன்றாக கழுவி எடுத்து கொள்ளுங்கள்.

  • 04

    அதன் பின் சோம்பு -1 ஸ்பூன்.., சீரகம் 1 ஸ்பூன் .., இஞ்சி சிறு துண்டு..., மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்.., மிளாகாய் -2 ..,போட்டு இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து எடுத்து கோழியில் போட்டு நன்றாக முழுவதுமாக பிரட்டி அரை மணி நேரம் அதை ஊற வைத்து கொள்ளுங்கள்

  • 05

    பின் அதை எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்து கொள்ளவும்.

  • 06

    அதன் பிறகு ஒரு சட்டியில் எண்ணெய் 5 ஸ்பூன் ஊற்றி அதில் கிராம்பு.., பட்டை.., இலவங்கம் ஏலக்காய் போட்டு பொரிய விடவும்....

  • 07

    பொறிந்த பின் வெங்காயம் -2 ., தக்காளி - 2., பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் .., கருவேப்பிலை பேஸ்ட்- 1 ஸ்பூன் .., புதினா - சிறிதளவு.., உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

  • 08

    நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்த விழுதை கொட்டி கொதிக்க விடவும்...

  • 09

    பின் அதில் கெட்டியாக எடுத்து வைத்த தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும்

  • 10

    பின் அதில் வறுத்த கோழியை போட்டு சிறிது நேரம் கொதிக்க விட்டு

  • 11

    பின் அதில் பாசுமதி அரிசியை கொட்டி வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரை வேக்காடக வேக விட வேண்டும்.

  • 12

    பின் அரை வேக்காடாக வெந்த பின் கூக்கரில் அடியில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் ஒரூ பாத்திரத்தில் வெந்த பிரியாணியை அள்ளி வைக்கவும் கீழே உள்ளது போல்.... குக்கரை மூடி 3 சவுண்ட் 5 நிமிடம் வைத்து இறக்கவும்

  • 13

    ஒரு அகல பாத்திரத்தில் கொட்டி சிறிது கொத்தமல்லி தூவி மெதுவாக கிளறி பரிமாறவும்...

  • 14

    சுவையான செட்டிநாடு சிக்கன் பிரியாணி தயார்

  • 15

    நோட்; அனைத்தையும் அரைத்து செய்வதனால் எதையும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாது..அனைத்து சத்துக்களும் உடம்பிலும் சேர்ந்து விடும்.

Review

0

Please Login to comment

Link copied