வெஜிடபிள் பிரியாணி

Copy Icon
Twitter Icon
வெஜிடபிள் பிரியாணி

Description

Cooking Time

Preparation Time :25 Min

Cook Time : 35 Min

Total Time : 1 Hr 0 Min

Ingredients

Serves : 5
  • 1 cups பாசுமதி அரிசி


  • 1/4 cups எண்ணை


  • 2 inch பட்டை


  • 3 nos கிராம்பு


  • 2 nos ஏலக்காய்


  • 2 nos பிரியாணி இலை


  • 1/2 tsp சோம்பு


  • 3 nos பச்சை மிளகாய்


  • 2 nos வெங்காயம் பெரியது


  • 2 nos தக்காளி


  • 2 tsp இஞ்சி பூண்டு விழுது


  • 1 nos கேரட்


  • 10 nos பீன்ஸ்


  • 3 tbsp பட்டானி


  • 2 nos உருளைக்கிழங்கு


  • 1/4 cups காளிஃபிளவர்


  • 3 tbsp தயிர்


  • 1/4 tsp மஞ்சள் தூள்


  • 1 tsp மிளகாய் தூள்


  • 2 tsp கொத்தமல்லி தூள்


  • 1/2 tsp கரம் மசாலா தூள்


  • 1/2 tsp பிரியாணி மசாலா தூள்


  • 3 tbsp உப்பு (தேவைக்கேற்ப)


  • 1 1/2 cups தண்ணீர்


  • 1 tbsp எலுமிச்சைச் சாறு

Directions

  • அரிசியை நன்றாக கழுவி 15 நிமிடம் ஊர வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்க்கவும்.
  • பின்பு பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • அதனுடன் தக்காளி சேர்க்கவும், நன்கு வதங்கியவுடன் அனைத்து மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். பின் காய்கறிகளை வதக்கிய பிறகு தயிர், புதினா மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்கவும்
  • அதன்பின் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதித்த பிறகு அரிசியை சேர்த்து நன்கு கலந்த பின் எலுமிச்சை சாறு ஊற்றி மிதமான சூட்டில் 20 நிமிடம் மூடி வைக்கவும்.
  • தயிர் பச்சடியுடன் சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.