ராகி கூழ்

Copy Icon
Twitter Icon
ராகி கூழ்

Description

Cooking Time

Preparation Time :6 Hr 0 Min

Cook Time : 30 Min

Total Time : 6 Hr 30 Min

Ingredients

Serves : 4
  • 250 gms ராகி மாவு


  • 1 1/2 litre தண்ணீர்


  • 200 ml தயிர்


  • 1 cups நறுக்கிய பெரிய வெங்காயம்


  • 4 tsp தூள் உப்பு


  • 1 nos வெந்த சாதம் handful

Directions

  • ராகி மாவை 500மிலி தண்ணீர் விட்டு கரைத்து மூடி வைக்கவும்.
  • 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • 5 மணி நேரத்திற்கு பிறகு 1 லிட்டர் தண்ணீரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்த பிறகு வெந்த சாதத்தை அதில் போடவும்.
  • அது கொதிக்கும் போது கரைத்து வைத்த கேழ்வரகு மாவை ஒரு கையால் ஊற்றி கொண்டு இன்னொரு கையால் விடாமல் கிளறவும்.
  • 5 நிமிடம் விடாமல் கிளறவும்.
  • பிறகு இன்னும் 20 நிமிடங்கள் அடுப்பிலேயே வைத்து அவ்வப்போது கிளறவும்.
  • 20 நிமிடங்கள் வெந்த பிறகு இறக்கி வைக்கவும்.
  • 2 மணி நேரம் நன்றாக ஆற வைத்து விடவும்.
  • தேவையான அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நறுக்கிய வெங்காயம், தயிர், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கையால் கரைத்து ஒரு டம்ளரில் ஊற்றி அருந்தவும்.
  • மொச்சை கார குழம்பு சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
  • வெயிலுக்கு ஏற்ற பானம்.